ஆப்பிரிக்காவின் உணவு பாதுகாப்பு பிரச்சனைக்கு ரஷ்யாவும், சீனாவும் தான் காரணம் - அமெரிக்கா குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


முதல் அமெரிக்க பெண் கருவூல அமைச்சர் ஜேனட் யெல்லன், பத்து நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா சென்றுள்ளார். பின்பு, ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டின் தலைநகர் டக்கரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கலந்து கொண்டார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநாட்டில் பேசிய அமைச்சர் ஜேனட் யெல்லன், ஆப்பிரிக்காவில் நிலவும் உணவு பாதுகாப்பு பிரச்சனை மற்றும் உணவு நெருக்கடி அதிகரித்து வருவதற்கு ரஷ்யாவும், சீனாவும் தான் முக்கிய காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனின் தானியங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனால் உக்ரைனை சார்ந்து இருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் உணவு பாதுகாப்பின்மையை சந்தித்து வருகின்றன என்றும், சீனாவின் கடன் கொள்கை, பொருளாதாரத்தில் சரிவை சந்தித்து வரும் நாடுகளுக்கு மேலும் அழுத்தத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், ஆப்பிரிக்காவின் சிறந்த பொருளாதார எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளுடன் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America blames Russia and China for Africa food security problem


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->