பாகிஸ்தான் வெள்ள பாதிப்பு : நிவாரண உதவியாக நூறு மில்லியன் வழங்கும் அமெரிக்கா.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு, பாகிஸ்தான் நாட்டில் பெய்த பருவகால மழை பாதிப்புகளால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டன. 

இந்த மழை பதிப்பில் நாட்டில் சுமார் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர். மேலும், இந்த விபத்தில் சுமார் 1,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல மக்கள் வெள்ள பாதிப்பில் படு காயமடைந்தனர். 

இந்த இக்கட்டான சூழ்நிலையில், உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்தது. இதற்கு இடையே, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கனை வாஷிங்டன் நகரில் நேரில் சந்தித்துப் பேசினார். 

இதில், அமெரிக்கா முதல் கட்டமாக பாகிஸ்தான் நாட்டின் வெள்ள நிவாரண மற்றும் மனிதநேய அடிப்படையிலான நிதி உதவியை ஒதுக்கியது.

இந்த நிலையில், அமெரிக்கா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் மேலும் 100 மில்லியன் டாலரை உணவு பாதுகாப்பு உதவி தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america one hundrad millions allounce for pakisthan floods recovery


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->