பாகிஸ்தானின் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம் - அமெரிக்கா தகவல் - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் பண வீக்கம் மற்றும் அன்னிய செலாவணி குறைபாட்டால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் உணவு தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் பொருளாதாரத்தை பெரும்பாலும் பன்னாட்டு நிதி நிறுவனத்தையே சார்ந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் கைதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கடையடைப்பு, தொழில் நிறுத்தம், போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் நாடு முடங்கியது. இதனால் கலவரங்களை கட்டுப்பாட்டுகள் கொண்டு வர பாகிஸ்தான் அரசு ராணுவத்தை களமிறக்கியது.

இதனிடையே அமெரிக்கா டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சிடைந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரங்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. மேலும் ரூபாய் மதிப்பு 3.3% வீழ்ச்சியடைந்து 300 ரூபாயை எட்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America says that we are watching Pakistan closely


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->