சக்திவாய்ந்த 60 பிராட்லி ரக கவச வாகனங்களை உக்ரைனுக்கு அனுப்பியது அமெரிக்கா..!! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலை சமாளிக்க அதிநவீன ஆயுதங்களையும், பீரங்கிகளையும், போர் விமானங்களையும் வழங்குமாறு  அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து உக்ரைனுக்கு அதிக திறன் கொண்ட ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள், மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தடுப்பு வாகனம் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆயுத உதவியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா சக்தி வாய்ந்த 60 பிராட்லி ரக கவச வாகனங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. இதில் சக்தி வாய்ந்த துப்பாக்கி பொருத்தப்பட்ட பிராட்லி ரக வாகனங்கள் அமெரிக்க ராணுவத்தில் 1980ஆம் ஆண்டு முதல் ராணுவ வீரர்களை போர்க்களங்களுக்கு அழைத்துச் செல்ல பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

தற்போது ரஷ்யாவின் தொடர் தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு அனுப்பப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America sent powerful 60 Bradley armored vehicles to Ukraine


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->