ஹைப்பர் சோனிக் ஏவுகணை... அமெரிக்க ராணுவம் மீண்டும் சோதனை.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா ராணுவத்தின் நிலம் மற்றும் கடல் சார்ந்த ஹைப்பர் சோனிக் திறன்களை மேம்படுத்துவதற்காக கடந்த அக்டோபர் 2021-ல் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அமெரிக்கா சோதனை செய்தது.

இந்நிலையில் இந்தத் திட்டத்தின் இரண்டாவது பகுதியாக அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை அமெரிக்கா சோதனை செய்துள்ளது.

இதையடுத்து ராணுவம் மற்றும் கடற்படை கூட்டு முயற்சியை ஆதரிப்பதற்காக ஹைப்பர்சோனிக் ஆயுத மேம்பாட்டிற்கான தகவல்களைச் சோதிக்கவும், சேகரிக்கவும் 11 வெவ்வேறு ராக்கெட் சோதனைகளை மேற்கொண்டதாக அமெரிக்கா கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கடற்படையில் அமெரிக்கா ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America tests hypersonic rockets again in Virginia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->