சிறு வயதில் சென்னையில் தீபாவளி கொண்டாடிய ஞாபகம் வருகிறது! கமலா ஹரிஸ்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் தீபாவளியை சில நாட்களாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் கொண்டாடினார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனக்கு நெருக்கமான இந்திய வம்சாவளியினருடன் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்.

இதேபோன்று தற்போதைய அமெரிக்காவின் துணை அதிபரும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் தனது இல்லத்தில் நேற்று இந்திய வம்சாவளினருடன் தீபாவளியை கொண்டாடினார். அவரின் இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பாடல்கள் இசைக்கப்பட்டு நடன நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு மற்றும் பட்டாசுகளை பரிசாக வழங்கினார். அவர்களுடன் சேர்ந்து கமலா ஹாரிஸ் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினார்.

தீபாவளி குறித்து அவர் பேசுகையில் "தீபாவளி கலாச்சாரங்களை கடந்து உலகளவிய ஒரு பண்டிகை. இருளில் இருந்து வெளிச்சம் பிறப்பது தான் இந்த பண்டிகையின் சிறப்பம்சமாகும். அமெரிக்க துணை அதிபர் என்ற முறையில் இதை பற்றி அதிகம் யோசித்துள்ளேன். இருள் சூழ்ந்த தருணங்களில் ஒளியை கொடுக்கும் சக்தியின் முக்கியத்துவத்தை தீபாவளி போன்ற பண்டிகைகள் நமக்கு உணர்த்துகிறது. சிறு வயதில் சென்னையில் நான் தீபாவளி கொண்டாடிய ஞாபகங்கள் இப்பொழுதும் என் மனதுக்குள் வந்து செல்கிறது" கமலா ஹாரிஸ் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American vice president Kamala Harris celebrated the Diwali festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->