மியான்மர் தேசிய தினத்தையொட்டி 5,774 கைதிகளுக்கு பொது மன்னிப்பு அறிவிப்பு.!
Amnesty announcement for 5774 prisoners on Myanmar National Day
ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்பட தலைவர்கள் மற்றும் வெளிநாட்டினர் சிலரை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்நிலையில் மியான்மர் நாட்டின் தேசிய தினத்தையொட்டி சிறையில் இருந்து 5774 கைதிகளுக்கு மியான்மரின் மாநில நிர்வாக கவுன்சில் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்துள்ளது. இத்தகவலை அரசு தொலைக்காட்சி சேனலான எம்ஆர்டிவியை மேற்கோள் காட்டி சின்ஹுவா தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் தேசிய தினத்தைக் குறிக்கும் வகையிலும், மனிதாபிமான அடிப்படையிலும், அந்தந்த நாடுகளுக்கும், மியான்மருக்கும் இடையிலான உறவுகளைக் கருத்தில் கொண்டு கைதிகளின் தண்டனைகள் விடுவிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இங்கிலாந்து முன்னாள் தூதர் விக்கி பவ்மேன், ஆஸ்திரேலிய பொருளாதார நிபுணர் சீன் டர்னெல், ஜப்பானிய பத்திரிகையாளர் டோரூ குபோடா மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கலைஞர்கள் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Amnesty announcement for 5774 prisoners on Myanmar National Day