அம்னஸ்டி இன்டா்நேஷனல் அறிக்கை விவகாரம்.! உக்ரைன் பிரிவு தலைவர் ராஜினாமா.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்நிலையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உக்ரைன் ராணுவ நிலைகளை அமைத்து வருவதாகவும், இதனால் அந்த நிலைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதில் பொதுமக்கள் உயிரிழப்பதாகவும், பொதுமக்களை அந்த நாட்டு ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டா்நேஷனல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அறிக்கை, உக்ரைனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அம்னஸ்டி இன்டா்நேஷனலின் உக்ரைன் பிரிவு தலைவா் ஒக்சானா போகல்சுக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தனது எதிர்ப்பையும் மீறி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதால் ஒக்சானா போகல்சுக் அம்னஸ்டி இன்டா்நேஷனல் அமைப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amnesty International reports issue Oksana Pokalchuk resign


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->