அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேல்-பாலஸ்தீன அதிபருடன் ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன ஆயுத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்ற வருகிறது. சில நாட்களுக்கு முன், இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீன பகுதியில் உள்ள முகாமில் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பாலஸ்தீனத்தின் காஸா பகுதியிலிருந்து 2 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வீசப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதுவரை இரு பகுதியினருக்கும் ஏற்பட்ட பல்வேறு மோதல்களில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே போர்பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே ஏற்படும் பதற்றத்தை தணிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன் முதல் படியாக திங்கள் கிழமை இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். பின்னர் நேற்று, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். 

இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்த சுற்றுப்பயணம் போர் பதற்றத்தை தணிப்பதற்காக மட்டுமில்லாமல், இரு தரப்பினரும் சமாதானத்தை நோக்கி முன்னேறுவதற்கான அமெரிக்காவின் செயல் திட்டங்களை விளக்குவதுமாகும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Antony Blinken meets with Israeli and Palestinian presidents as war tension increases


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->