பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிக்க அகஸ் கூட்டமைப்பு முடிவு.!
Aukus cooperation on hypersonic missile
பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரிக்க முடிவு செய்துள்ளன.
பசிபிக் கடல் பகுதியில் சீன ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலிய ஆகிய நாடுகள் இணைந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'ஆகஸ்' என்ற பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கின.
சீனா மற்றும் ரஷ்ய நாடுகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிபில் ஈடுபட்டுள்ளன. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை வேறு எந்தவொரு ஏவுகணை தடுப்பு ஆயுதத்தாலும் இடைமறிக்க முடியாத அளவுக்கு வேகமாக பாயக்கூடியது ஆகும். இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் ரஷ்யா ஈடுபட்டிருப்பதை கடந்த ஆண்டே அமெரிக்க ராணுவம் உறுதி செய்தது.
உக்ரைன் உடனான போரில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. இதையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டணியான 'ஆகஸ்' அமைப்பு சார்பாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்க மூன்று நாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
English Summary
Aukus cooperation on hypersonic missile