சுறா தாக்கியதில் ஒருவர் பலி., கடற்கரைக்கு விதிக்கப்பட்ட தடை.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்து இருப்பது லிட்டில் பே கடற்கரை.  இந்த கடற்கரையில் நேற்று நீச்சல் அடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை திடீரென பெரிய சுறா மீன் ஒன்று தாக்கியது. 

சுறா தாக்குதலில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த காணொளி சமூக வளைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியடைய  வைத்தது.

இதனையடுத்து, சிட்னி கடற்கரையில் நுழைய பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுறா மீன் தாக்குதல் நடத்திய இடத்தைச் சுற்றி "இது அபாயப் பகுதி" என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, அந்த நபரை தாக்கியது 9.8 அடி நீளமுள்ள வெள்ளை நிற சுறாவாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த 1963-ம் ஆண்டுக்கு பிறகு சிட்னியில் நடந்த முதல் அபாயகரமான சுறா தாக்குதல் இது என்றும் சொல்லப்படுகிறது.

அந்நாட்டில் இது கோடைக் காலம் என்பதால், மக்கள் கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுறா மீன் இருப்பது குறித்து ட்ரோன் மூலம் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia Sydney Beaches Close after First Fatal Shark Attack 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->