உலகிலேயே அதிக எடையில் பிறந்த குழந்தை.!! எங்கு தெரியுமா?
Baby boy born more than 7 kg in Chile
உலகில் இதுவரை பிறக்கும் குழந்தை 7 கிலோவை தாண்டியதில்லை. அதிகபட்சமாக சிலி நாட்டில் 6.7 கிலோ எடையுடன் குழந்தை பிறந்ததே சாதனையாக இருந்து வந்த நிலையில் தற்போது 7.1 கிலோவில் குழந்தை பிறந்து முந்தைய குழந்தையின் சாதனையை முறியடித்துள்ளது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த குழந்தையும் சிலி நாட்டில் தான் பிறந்துள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எடை பொதுவாக 2.5 கிலோ முதல் ௪ கிலோ வரை இருக்கும். 4 கிலோக்கு மேல் பிறக்கும் குழந்தைகள் உடல் பருமனாக, பிறவி குறைபாடுகள் இருக்கலாம்.
அதேபோன்று 1.5 கிலோவுக்கு குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தையின் எடையை மேம்படுத்த, சிறப்பு உணவு குழாய்கள் கொண்ட இன்குபேட்டர்களில் வைக்கப்படும். ஆனால், சிலி நாட்டில் ஆண் குழந்தை ஒன்று 7.1 கிலோ எடையில் பிறந்துள்ளது. இது குறித்து சிலி நாட்டு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் "உடல்நலக் குறைபாடுகள் காரணமாக குழந்தையை வேறு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். குழந்தை தற்போது சீரான நிலையில் இருக்கிறது. அவரது தாயார் தான் பெற்றெடுத்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Baby boy born more than 7 kg in Chile