பேஸ்புக் நிறுவனத்துக்கு திடீர் தடை..சிரமம் அடைந்த பொதுமக்கள்!
Ban on Facebook Civilians in difficulty
பப்புவா நியூ கினிவாவில் பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்தனர்.
உலகம் முழுவதும் பிரபலமானது பேஸ்புக் நிறுவனம்.இந்த பேஸ்புக் நிறுவனம் மூலம் மில்லியன் கணக்கானோர் வலை தள கணக்குகளை தொடங்கி பயன்படுத்திவருகின்றனர்.இந்தநிலையில் பப்புவா நியூ கினிவாவில் பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது.
சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கும் ஆஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடாக பப்புவா நியூ கினியா உள்ளது. இந்த நாடு சுற்றுலா தலங்களுக்கு மிகவும் பிரபலமாக உள்ளது.
இங்குள்ள பொதுமக்கள் சுமார் 13 லட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்திவருகின்றனர். பேஸ்புக்கை அதிகளவில் மக்கள் பயன்படுத்தி வருவதால் போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து பேஸ்புக்குக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி வந்தது.இந்நிலையில், பப்புவா நியூ கினிவாவில் பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்தனர்.
மேலும் இந்த பேஸ்புக்கு தடை விதிப்புக்கு மக்களின் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் பறிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
English Summary
Ban on Facebook Civilians in difficulty