உலகில் மிகவும் ஆபத்தான நாடு இதுதான்! இந்தியா பிடித்த இடம் தெரியுமா? வாகன ஓட்டிகளே உஷார்! - Seithipunal
Seithipunal


உலகளவில் 53 நாடுகளில் அமெரிக்காவின் ‘ஜுடோபி’ ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வருடாந்திர அறிக்கையில், தென்னாப்பிரிக்கா வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்கா 3-வது இடத்திலும், இந்தியா 5-வது இடத்திலும் உள்ளது. பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையில், நார்வே தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடம் பிடித்து வருகிறது.

ஆபத்தான நாடுகளின் தரவரிசை நிர்ணயம் சாலை வேக வரம்புகள், போக்குவரத்து இறப்பு விகிதங்கள், விதி மீறல்களின் எண்ணிக்கை போன்ற பல்வேறு காரணிகளை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக ‘ஜுடோபி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அனைத்து நாடுகளிலும் போக்குவரத்து விபத்து இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு சராசரியாக 8.9-லிருந்து 6.3 ஆகக் குறைந்துள்ளது. ஆனால், வேக வரம்புகளில் எந்த மாற்றமும் இல்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் போக்குவரத்து விதிகள் நடைமுறையில் இருந்தாலும், ஊழலில் மலிந்த அதிகாரிகள் காரணமாக பலர் முறையான விதிகளை பின்பற்றுவதில்லை என அந்த நாட்டில் தனியார் ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் அலிஷா சின்னா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World Dangers road traffic accident Country


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->