தமிழகத்தில் ₹500 கோடி வருமான வரி மோசடி – 22,500 பேர் முறைகேடு செய்தது அம்பலம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மிகப்பெரிய வருமான வரி மோசடி நடந்துள்ளதைக் கண்டறிந்துள்ளது வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 22,500 பேர், போலி ஆவணங்களை பயன்படுத்தி ₹500 கோடி வருமான வரி மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக வருமான வரித்துறை மேற்கொண்ட விசாரணையில், பலர் தவறான தகவல்களைச் சமர்ப்பித்து வரி குறைப்பதோடு மட்டுமல்லாமல், மோசடி முறையில் வரி திருப்பி பெற்றிருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

போலியான வருமானக் கணக்கீடுகள், தனிநபர் செலவினங்களை அதிகமாகக் காட்டி வரிவிலக்கு பெறுதல், இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன.

இச்சம்பவம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் வருமான வரி தாக்கல் விவரங்களை கண்காணிக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போலி வருமான வரித் தாக்கலுக்காக தனியார் நிறுவனங்கள் மற்றும் சில நிதி ஆலோசகர்களின் ஆதரவோடு இந்த மோசடி நடந்திருக்கலாம் என்பதால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu IT SCam shocking info


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->