வங்கதேசத்தில் சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு - இராணுவம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடந்த போரில், வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. 

இந்த இட ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக கூறி கடந்த மாதம் அந்நாட்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். 

இதற்கிடையே, இந்த இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்க, பின்னர் போராட்டம் ஓய்ந்தது. ஆனால், பிரதமர் ஷேக் ஹசீனா போராட்ட காரர்களை பார்த்து தீவிரவாதிகள் என்று கூற மீண்டும் போராட்டம் வெடித்தது.

பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும், முந்தைய போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கக் கோரியும் நடந்த போராட்டத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றும் வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது.

தொடர்ந்து வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையை விட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிடவே, அந்நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.

இந்நிலையில், வங்கதேசத்தில் சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமைய உள்ளதாக நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இடைக்கால பிரதமராக சலிமுல்லா கான் செயல்படுவார் என்றும், ராணுவம் தற்போது அறிவித்துள்ளது. கலவரம் காரணமாக பதவியை ராஜினாமா செய்து விட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அந்நாட்டு ராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh violence Sheikh Hasina Army 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->