பெங்களூர் || தண்ணீரில் தத்தளித்த ஏ.டி.எம்.! ரூ.15 லட்சம் சேதம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால், நகரில் உள்ள தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். 

இந்நிலையில், அங்குள்ள சில்க் போர்டு ஜங்ஷன் பகுதியில் ஒரு ஏ.டி.எம் மையத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதன் காரணமாக அங்கிருந்த ஏ.டி.எம் எந்திரம் தண்ணீரில் மூழ்கியது. 

இதுபற்றி தகவல் அறிந்ததும் வங்கி அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர், அந்த ஏ.டி.எம் எந்திரத்தில் ரூ.15 லட்சம் பணம் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. தண்ணீரில் எந்திரம் மூழ்கியதால் பணமும் நனைந்தது தெரியவந்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

banglore heavy rain atm damage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->