பெல்ஜியத்தில் டிக்-டாக் செயலிக்கு தடை.!! - Seithipunal
Seithipunal


சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக் டாக் செயலியை அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்த தடைவிதிப்பதாக பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவுக்கு சொந்தமான டிக் டாக் செயலி, சீன உளவு அமைப்புடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் அவசியம் இருப்பதால், வாடிக்கையாளர்களிடையே அதிக அளவு தரவுகளை சேமிப்பதாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மற்றும் அரசு அலுவலக தகவல்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை வைத்திருக்க தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிக் டாக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தரவுகளை நாங்கள் சேமிக்கவில்லை, இது முற்றிலும் தவறான தகவல் என்றும், பெல்ஜியத்தின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இளைஞர்களிடையே பொழுதுபோக்கு அம்சமாக அதிக அளவு திகழும் டிக் டாக் செயலிக்கு இந்தியா,  அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே தடை விதித்த நிலையில் தற்போது பெல்ஜியம் அரசும் தடை விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Belgium banned tik tok app


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->