"நரக வேதனை எதிர்கொள்ள நேரிடும்" ஹமாஸிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்!
Benjamin Netanyahu Israel Hamas Warn
இஸ்ரேல்-ஹமாஸ் போரின்போது காசா பகுதியில் மும்முனை தாக்குதல்களை மேற்கொண்ட இஸ்ரேல், 45,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை உயிரிழக்க செய்தது. காசா நகரங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன.
அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்ததைத் தொடர்ந்து 42 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் கைசாத்தானது. இதன்படி, ஹமாஸ் தனது பிணைக்கைதிகளை விடுவிக்க, பதிலளிப்பாக இஸ்ரேல் சிறையில் இருந்த பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் ஒப்பந்தம் நடந்துள்ளது.
ஆனால், இன்னும் பலர் ஹமாஸ் பிடியில் உள்ளனர். அவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றார். ஜெருசலேமில் அவர் பிரதமர் நேதன்யாகுவை சந்தித்து பேசினார்.
பின்னர், நேதன்யாகு பேசும்போது, "காசா போர் தொடர்பாக இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒரே நோக்கில் உள்ளன. ஹமாஸ் ஒழிக்கப்பட வேண்டும். அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால், நரக வேதனையை அனுபவிக்க நேரிடும். காசாவில் ஹமாஸ் மீதான அரசியல் மற்றும் ராணுவ போராட்டம் தொடரும். பிணைக்கைதிகள் மீட்கப்படுவார்கள். காசா இனி எங்கள் மீது அச்சுறுத்தலாக இருக்காது," என்று எச்சரித்தார்.
English Summary
Benjamin Netanyahu Israel Hamas Warn