அமெரிக்கா || 3 அடுக்குமாடி குடியிருப்பில் குண்டு வெடிப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் வெஸ்ட் எண்ட் அவென்யூவில் மூன்று தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மேல் தளத்தில் திடீரென்று அதிக சத்தத்துடன் குண்டுவெடித்தது.

இந்த குண்டு வெடிப்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு தளங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் ஒரு தளத்தில் தீ பற்றி எரிய தொடங்கின.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை அனைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதையடுத்து இடிப்பாடுகள் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பில் இதுவரை 10 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பிற்காக அருகாமையில் உள்ள கட்டிடங்களில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bomb blast in 3 storey building in Chicago


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->