பர்கின பாசோவில் கிளர்ச்சி கும்பல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பர்கின பாசோவில் கிளர்ச்சி கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கின பாசோவில், நைஜர் நாட்டை ஒட்டி உள்ள எல்லைக்கு அருகில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள புலம்பெயர் மக்கள் வாழும் கிராமத்திற்குள் நள்ளிரவில் புகுந்த கிளர்ச்சி கும்பல் கண்மூடித்தனமாக குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 165 பேர் இதுவரை கொல்லப்பட்டதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்த தாக்குதலில் இருந்து தப்பி ஓடிய சுமார் 3 ஆயிரம் பேர் பர்கினா பாசோவை சுற்றியுள்ள சஹேல் பிராந்தியத்தின் தலைநகரான டோரிக்கு வந்துள்ளனர் என்று உள்ளூர் வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் அல்கொய்தா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகளின் செயலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Burkini Faso rebel attack hundred above people died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->