போரை நிறுத்த முடியாது - ரஷ்யா மீது உக்ரைன் காட்டம்! - Seithipunal
Seithipunal


கடந்த 2022-ம் ஆண்டு நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா,  உக்ரைன் மீது போர் தொடுத்தது.  உக்ரைனுக்கு அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவிகள் அளித்து வருவதால், ரஷியாவுக்கு கடும் சவாலை உக்ரைன் அளித்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைன் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருப்பதாக புதின் அண்மையில் அறிவித்தார். தொடர்ந்து உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது என்று மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார். அப்போது, புதின் எண்ணற்ற சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், அவர் தானாக போரை நிறுத்த மாட்டார் என்றும், ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் போரை நிறுத்திவிட முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், ஒரே ஆக்கிரமிப்பாளர் மற்றும் ஐ.நா. விதிகளை மீறியவர் என்ற அடிப்படையில், ரஷியாவை அமைதி தீர்வுக்கு தள்ள உலகளாவிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை ஒவ்வொரு நாடும் மதிக்க வேண்டும் என்ற ஐ.நா. பிரகடனத்தை ரஷியா பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Can not stop the war ukraine on russia


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->