இந்தியா தான் எங்களுக்குப் பெரிய அச்சுறுத்தல் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
Canada PM Justin Trudo says about India
காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடைய ஒரு பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இவர் 1990களின் நடுப்பகுதியில் கனடாவில் குடியேறினார். அதாவது 1997ம் ஆண்டு போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கனடாவிற்குள் நுழைந்தார்.
இதையடுத்து நிஜ்ஜார் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று 2014ம் ஆண்டு இவரை கைது செய்ய இந்திய அரசாங்கம் அரசாணை பிறப்பித்தது. மேலும் ஒரு குண்டு வெடிப்பில் நிஜ்ஜாருக்கு தொடர்பு இருப்பதாகவும், மேலும் வெடி மருந்துகளை இந்தியாவிற்கு கடத்துவதாகவும் இந்திய அரசு இவர் மீது குற்றம் சாட்டியது.
இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த நிஜ்ஜார், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். இதனிடையே 2018ம் ஆண்டு கனடாவில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவரானார் நிஜ்ஜார். 2020ம் ஆண்டு இந்தியா நிஜ்ஜாரை பயங்கரவாதியாக அறிவித்தது.
இந்நிலையில் 2023ம் ஆண்டு கனடாவில் உள்ள குருநானக் குருத்வாராவின் வெளியே படுகொலை செய்யப்பட்டார் நிஜ்ஜார். இதையடுத்து இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக அறிவித்தார்.
இதையடுத்து இந்தியாவில் உள்ள கனடிய தூதரை வெளியேறவும், கனடியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையையும் இந்திய அரசு நிறுத்தி வைத்தது. இதையடுத்து தற்போது கனடாவின் ஜனநாயகத்திற்கு இரண்டாவது பெரிய அச்சுறுத்தலாக இந்தியா உள்ளது.
மேலும் முதலிடத்தில் சீனாவும், மூன்றாமிடத்தில் ரஷ்யாவும் அச்சுறுத்தலாக உள்ளன என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
English Summary
Canada PM Justin Trudo says about India