கனடாவில் சீக்கிய மாணவர் தாக்குதல்! கண்டனம் தெரிவித்த இந்தியா! - Seithipunal
Seithipunal


கனடா, கொலம்பியா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் சீக்கிய மாணவர் (வயது 17) தாக்கப்பட்டுள்ளார். 

இவர் ரட்லேண்ட் சாலை தெற்கு ராய்ப்பூர் கிழக்கு சந்திப்பில் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 நபர்கள் அவரை தாக்கியுள்ளனர். 

இந்த தாக்குதலுக்கு முன்பு பேருந்தில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

இந்தியா இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய துணை தூதரகம் தெரிவித்திருப்பதாவது, 'சீக்கிய மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனடா அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்' என தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Canada Sikh student attack Condemned India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->