ஒரே ராக்கெட்டில் 41 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய சீனா..!
China launched 41 satellites in one rocket
2030-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புதல், விண்வெளியில் புதிய ஆராய்ச்சி மையம் நிறுவுதல் என அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இணையாக விண்வெளி துறையில் சீனா பல்வேறு திட்டங்களுடன் போட்டி போட்டு வருகிறது. இதனிடையே கடந்த வாரம் 3 சீன விண்வெளி வீரர்கள் 6 மாத கால விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு ஷென்ஜோவ் 5 மூலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று 1:30 மணிக்கு வடக்கு சீனாவிலுள்ள தையுவான் ஏவதளத்திலிருந்து 41 செயற்கைகோளுடன் மார்ச்-2டி என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் மூலம் சீனாவில் ஒரே நேரத்தில் அதிக செயற்கைக்கோளை தூக்கிச் சென்ற சாதனையை மார்ச்-2டி பெற்றுள்ளது.
இந்த செயற்கைக்கோள் தொகுப்பில் சாங் குவாங் சேட்டிலைட் டெக்னாலஜி கோ நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட ஜிலின்-1 குடும்பத்தைச் சேர்ந்த 36 செயற்கைக்கோள்கள் மற்றும் ஐந்து சீன அரசின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களும் அடங்கும்.
இது தொடர்பாக சீன விண்வெளி மையம் வெளியிட்ட அறிக்கையில், வணிக நோக்கத்துடன் அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள் வணிக தொலையுணர் சேவைகள், வணிக ரிமோட் சென்சிங் சேவைகள் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை சரிபார்க்க இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் நில வளங்கள், கனிம ஆய்வு மற்றும் ஸ்மார்ட் சிட்டி கட்டுமானம் போன்ற துறைகளுக்கு வணிக ரிமோட் சென்சிங் தரவு சேவைகளை வழங்க செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
English Summary
China launched 41 satellites in one rocket