சிங்கப்பூரில் இனவெறி: இந்தியர்கள் என நினைத்து... திரவைத்த சீன டாக்சி ஓட்டுநர்!
Chinese taxi driver abuses woman assuming Indian
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் ஜனெல்லா ஹோடன் (வயது 47) இவருக்கு 9 வயதில் மகள் உள்ளார். இவரும் இவரது மகளும் வெளியில் செல்வதற்காக கால் டாக்சி முன்பதிவு செய்திருந்தார்.
அதற்காக கால் டாக்சி நிறுவனத்தில் இருந்து கார் அனுப்பப்பட்ட நிலையில் ஜனெல்லா தனது மகளுடன் காரில் பயணம் செய்தார்.
சிறிது தூரம் கார் சென்றதும் மெட்ரோ ரயில் பணிக்காக சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டு வாகனங்கள் வேறொரு வழியில் திருப்பி விடப்பட்டது தெரியவந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் திடீரென ஜனெல்லாவை பார்த்து கத்த தொடங்கினார். மேலும் செல்லும் இடம் குறித்து தவறான தகவலை தெரிவித்ததாகவும் அதனால் தவறான வழியில் வந்து விட்டதாகவும் தெரிவித்து திட்டியுள்ளார்.
இதனை அடுத்து ஜனெல்லாவை இந்திய வம்சாவளியினர் என ஓட்டுநர் நினைத்துக் கொண்டு, நீங்கள் இந்தியர்கள் நான் சீனாவை சேர்ந்தவர், நீங்கள் ஒரு முட்டாள், நீங்கள் மிகவும் மோசமானவர்கள் என சத்தமாக தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜனெல்லா நான் இந்தியாவைச் சேர்ந்தவர் இல்லை. சிங்கப்பூரைச் சேர்ந்த யுரேனியன் வம்சாவளி என தெரிவித்துள்ளார்.
இந்தியர்களைப் போல யுரேனியன் வம்சாவளியினர் இருப்பதால் கால் டாக்சி ஓட்டுனரும் இனவெறியுடன் ஆவேசமாக திட்டியது தெரியவந்தது.
கால் டாக்சி ஓட்டுனர் இனவெறியுடன் பேசியதை ஜனெல்லா அவரது செல்போனில் பதிவு செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு சிங்கப்பூரில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கால் டாக்சி நிறுவனம் தெரிவித்திருப்பதாவது, இன வேறுபாடு குறித்த கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.
English Summary
Chinese taxi driver abuses woman assuming Indian