சீனாவில் பூனைகளுக்கு கொரோனா வைரஸ்; உலக நாடுகளுக்கு மீண்டும் அதிர்ச்சி..!
Coronavirus in cats in China
சீனாவில் வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை பூனைக்கு கொடுத்து வருகின்றனர்.
எப்.ஐ.பி., எனப்படும் 'பெலைன் இன்பெக்சியஸ் பெரிட்டோனிட்டிஸ்' எனப்படும் இந்த தொற்று, பூனைகளிடம் இருந்து பூனைக்கு பரவுமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
உடனடி சிகிச்சை முறைகள் ஏதும் இல்லாத நிலையில், கொரோனாவால் பாதிக்கப்படும் பூனைகள் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மெர்க்ஸ் லேக்விரியோ எனும் நோய் தடுப்பு மருந்தை பூனைகளுக்கு கொடுத்து வருவது மக்களிடையே அதிகரித்துள்ளது.
பூனைகளுக்கான கொரோனா பாதிப்பு மற்றும் அதற்கு வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்து சீன மக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையே நடத்தி வருகின்றனர்.
இது பற்றி மெர்க்ஸ் லேக்விரியோ மருந்து நிறுவனம் தரப்பில் கூறுகையில்,'மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் பூனைகளுக்கு பயன்படுமா? என்பது குறித்து பரிசோதிக்கவில்லை. அந்த யோசனையும் எங்களிடம் இல்லை', என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகளை புரட்டி போட்டது. இதன் பாதிப்பு முழுமையாக விலக 02 அல்லது 03 ஆண்டுகள் வரை ஆனது. ஐந்தாண்டுக்கு பின், தற்போது சீனாவில் மீண்டும் ஒரு வைரஸ் பரவி வருகிறது. 'ஹியூமன் மெடாநிமோ வைரஸ்' என்ற, எச்.எம்.பி.வி., தொற்று, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Coronavirus in cats in China