தென் கொரியன் நாடகங்களை பார்த்த 30 மாணவர்களுக்கு மரண தண்டனை.! - Seithipunal
Seithipunal


தென்கொரிய நாட்டின் நாடகங்களை பார்த்ததற்காக வடகொரியா அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாக இரண்டு தென் கொரிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக தென் கொரிய நாட்டின் அரசு அதிகாரிகளோ, வடகொரிய நாட்டின் அரசு அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. 

இதற்கு முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு தென் கொரிய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அடங்கிய பெண்டிரைவ் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக ஒருவரை வடகொரிய அரசு சுட்டுக்கொன்றது. இந்தத் தகவலை ஐ.நா. உறுதி செய்திருக்கிறது.

இதேபோன்று, இந்தாண்டு தொடக்கத்தில் இரண்டு இளைஞர்களுக்கு k pop வீடியோவை பார்த்ததற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தென் கொரிய அதிகாரிகள் இது குறித்து உறுதியாக எதையும் பொதுவெளியில் பேசுவதில்லை. இதனால், இந்தச் செய்தி உண்மையா? என்று சந்தேகப்படும் படி அமைகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death felanty to thirty students for watch korean drama


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->