துருக்கி சிரியா நிலநடுக்கம்.. பலரின் உயிரை காப்பாற்றிய ஜூலி நாய்.!
Dog Julie saved Many Soul In Turkey earthquake
துருக்கி சிரியா எல்லையில் கடந்த திங்கள்கிழமை மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த பகுதியில் இருந்த பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகியது.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக மக்கள் தங்களது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த போதே உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 24 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி இருக்கின்றனர்.
மேலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தார்கள். துருக்கி நாட்டு நிலநடுக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர் ஈடுபாடுகளில் சிக்கியவர்களில் தொடர்ந்து மீட்டுக் கொண்டு இருக்கின்றனர். இதுபோல இடுபாடுகளில் சிக்கிய நபர்களை மீட்க மீட்பு பணியில் ரோமியோ, ஜூலியோ உள்ளிட்ட 4 மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன.
இதுபோல இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் நபர்களை கண்டறிய மோப்ப நாய்கள் பெரிய அளவில் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், நாய் ஜூலி பலரது உயிரையும் காப்பாற்ற உதவி அவர்களை காப்பாற்றியதாக மீட்பு குழுவினர் கூறுகின்றனர்.
English Summary
Dog Julie saved Many Soul In Turkey earthquake