அடுத்தடுத்து குலுங்கிய கட்டடம் - ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்.!
earthquake in afganisthan
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பைசாபாத் பகுதியில் இன்று நள்ளிரவு தொடர்ந்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் நள்ளிரவு 12.28 மணியளவில் ரிக்டர் அளவில் 4.4. ஆக பதிவானது. இது 80 கி.மீ. ஆழத்தில், பைசபாத்தில் இருந்து 126 கி.மீ. கிழக்கு தொலைவில் ஏற்பட்டது.
இதேபோல், இரண்டாவது நிலநடுக்கம் நள்ளிரவு 12.55 மணிக்கு ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. 100 கி.மீ. ஆழத்தில் பைசாபாத்தின் 100 கி.மீ தென் கிழக்கில் நிகழ்ந்தது.
ஒரே நாளில், அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த இரண்டு நிலநடுக்கங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
English Summary
earthquake in afganisthan