நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்.!
Earthquake in newzealand tsunami warning
நியூசிலாந்து அருகே கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் துருக்கி, சிரியா, இந்தோனேசியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதி மக்கள் வசிக்காத சிறு தீவு பகுதிகளில் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த 3 நாட்களுக்கு முன் நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டன் நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Earthquake in newzealand tsunami warning