துருக்கியில் அதிகாலையில் திடீர் நிலநடுக்கம்.! பீதியில் மக்கள்.!
Earthquake of 4 magnitude hits turkey
துருக்கியின் அஃப்சினில் இருந்து தென்மேற்கே 23 கிலோ மீட்டர் தொலைவில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி 04:25 மணிக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தின் மையம் 38 டிகிரி வடக்கு மற்றும் 36 டிகிரி கிழக்கில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் காசியான்டெப் அருகே 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Earthquake of 4 magnitude hits turkey