இலங்கையில் புதிய அதிபர் தேர்வு?....மும்முரம் அடைந்த வாக்கு எண்ணும் பணி? - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது.

தொடர்ந்து  இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இதன் காரணமாக  இலங்கையின் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு அடைந்தவுடன் அங்கு வாக்கு என்னும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தற்போதைய நிலையில் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இன்று பிற்பகலுக்குள் யார் அதிபர் என்பது  தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தெரிய வர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election of a new president in Sri Lanka Busy vote counting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->