குறுஞ்செய்தியை அனுப்பும் நவீன முகக்கவசம் - சீனா சாதனை..! - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் உலக நாடுகளில் முழுவதுமாக தீராமல் மக்களை அச்சுறுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸிடமிருந்து மக்களை பாதுகாக்கும் அரணாக முக கவசம் உள்ளது. 

இந்நிலையில், காற்றில் வைரஸ் கலந்திருந்தால் அதனை முகக்கவசம் அணிந்திருப்பவருக்குக் குறுஞ்செய்தி மூலம் காட்டிக் கொடுக்கும் வகையில், நவீன முக கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் அமைந்திருக்கும் டோங்ஜி பல்கலைக்கழகத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், இந்த புதிய நவீன முக கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த முககவசத்தை மக்கள் அணிந்து கொண்டு வெளியில் செல்லும் போது, காற்றில் எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து,முகக்கவசத்தை  அணிந்திருப்பவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி, முககவசம் அணிந்திருப்பவரை எச்சரிக்கை படுத்தும் வகையில் தொழில்நுட்பம் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, முக கவசத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான யின் பாங் தெரிவிக்கையில், "முக கவசம் அணிவது நோய் பரவும் அபாயத்தை குறைக்கும் என்று முந்தைய ஆராய்ச்சி காட்டுகிறது. எனவே, காற்றில் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்து, அணிபவரை எச்சரிக்கும் வகையில் முக கவசத்தை உருவாக்க விரும்பினோம். 

நாங்கள் கண்டுபிடித்துள்ள முக கவசமானது காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களில், அதாவது 'லிப்ட்' அல்லது மூடிய அறைகள் போன்றவற்றிலும், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள இடங்களில் நன்றாக வேலை செய்யும்" என்று விஞ்ஞானி யின் பாங் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

electric mask made in china


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->