எலான் மஸ்க் -கே சைபர் தாக்குதலா!!! எக்ஸ் வலை தளத்துக்கு என்ன ஆச்சு?
Elon Musk app cyber attack What happened to the X website
'எக்ஸ் தளம்' சமூக வலைதளத்தில் அதிக மக்கள் பயன்படுத்தி வரும் ஊடகமாக இருக்கிறது.இதில் உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தி வரும் எக்ஸ் தளம் நேற்று (மார்ச் 10) திடீரென முடங்கியது.
முக்கியமாகப் பிற்பகல் 3.30 மணி முதல் 3.45 மணி அளவு வரைச் சிக்கல்களை எதிர்கொண்டதாகப் பயணிகள் தெரிவித்தனர். 15 நிமிடங்கள் கழித்து பிரச்னைச் சரியாகி எக்ஸ் தளம் இயல்பான செயல்பாட்டுக்கு வந்தது.

எலான் மஸ்க்:
இது தொடர்பாக, எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் 'எலான் மஸ்க்' அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது," எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இன்னும் தாக்குதல் நடந்து வருகிறது. நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுகிறோம்.
நிறைய ஆள் பலத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பெரிய குழு அல்லது ஒரு நாடு சம்பந்தப்பட்டிருக்கலாம். சைபர் தாக்குதல் குறித்து கண்காணித்து வருகிறோம்" என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் தொழில்நுட்ப நிருபரான எலன் மஸ்க்குக்கே இந்த நிலைமையை என கமெண்ட்க்ளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றன.
English Summary
Elon Musk app cyber attack What happened to the X website