நம்பிக்கை வார்த்தை!!! 8 முறை தோல்வி, அடுத்த ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விடுவோம்...! - எலான் மஸ்க்
Elon Musk hope we will send a rocket to Mars next year
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மார்ச் 14ம் தேதி 2002ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் 23 ஆண்டுகள் நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, தற்போது செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்ப மும்முரம் காட்டி வருகிறது.
கடந்த 8 முறையாக, 'ஸ்பேஸ் எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் திட்டம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது . மேலும் கடந்த மார்ச் 7ம் தேதி ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது.

இந்நிலையில் 'ஸ்பேஸ் எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் அடுத்த ஆண்டு (2026) இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும்' என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.இதில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் ஸ்டார்ஷிப்பில் மனித ரோபோவும் சேர்த்து அனுப்பப்படவுள்ளது.
அதேநேரத்தில், 2029ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தரையிறங்கலாம். இது 2031ம் ஆண்டிற்குள் கட்டாயமாக நடக்க வாய்ப்புள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பிய நாடுகளில் சீனா, ஐரோப்பிய நாடுகள்,இந்தியா, ரஷ்யா,அமெரிக்கா மற்றும் யு.ஏ.இ ஆகியவை அடங்கும்.
மேலும் கடந்த 2013ல் மங்கள்யான் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றது. இதில் செவ்வாய்க்கு செயற்கைக் கோள் அனுப்பிய முதல்நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
English Summary
Elon Musk hope we will send a rocket to Mars next year