எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் சோதனையின் போது வெடித்துச் சிதறியுள்ளது..!
Elon Musks SpaceX rocket exploded during the test
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மூலம் ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான 'ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி' (Starship Super Heavy) ராக்கெட்டின் 8-வது சோதனை முயற்சி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த 'ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி' விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக குறித்த ராக்கெட் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த ராக்கெட்டின் வெடித்துச் சிதறிய உடைந்த பாகங்கள் அதிக வெளிச்சத்துடன் தெற்கு ப்ளோரிடா மற்றும் பஹாமாஸ் வான்பகுதியில் தென்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
English Summary
Elon Musks SpaceX rocket exploded during the test