உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவாருங்கள்...டிரம்ப் விருப்பம்! - Seithipunal
Seithipunal


உக்ரைன்- ரஷியா இடையிலான போர் உடனடியாக நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விரும்புகிறார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில் "உக்ரைன்- ரஷியா இடையில் உடனடியாக போர் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும். தேவையில்லாமல் ஏராளமான உயிர்கள் வீணாகி வருகிறது. ஏராளமான குடும்பங்கள் சீரழிந்துள்ளது. இது இப்படியே சென்று கொண்டிருந்தால் மிகவும் பெரியதாகி மோசமானதாகிவிடும். ரஷிய அதிபர் புதினுக்கு இது நன்றாக தெரியும். அவர் செயல்பட வேண்டிய நேரம் இது. சீனா உதவி செய்ய முடியும். உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.

4 லட்சம் ராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உக்ரைன் நாட்டின் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். 

மேலும், நேட்டோ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் பாதுகாப்பு செலவிற்கான பணத்தை முறையான விகிதத்தில் வழங்கவில்லை என்றால் நேட்டோவில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

End the Ukraine-Russia war... Trump's will


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->