இந்து மத நம்பிக்கை தான் என்னை வழி நடத்துகிறது - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.! - Seithipunal
Seithipunal


இந்து மத நம்பிக்கை தான் தன்னை வழிநடத்துவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆன்மீக போதகர் மொராரி பாபுவின் 'ராம் கதா' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய சுதந்திர தினமான நேற்று முன்தினம் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், இந்திய சுதந்திர தினத்தன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மொராரி பாபுவின் ராம் கதா நிகழ்ச்சியில் இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இன்று நான் ஒரு பிரதமராக அல்லாமல் ஒரு இந்துவாக இங்கு நிற்கிறேன். மொராரி பாபுவுக்கு பின்னால் இருக்கும் தங்க ஆஞ்சநேயர் படத்தை போல என்னுடைய மேஜையில் ஒரு தங்க விநாயகர் மகிழ்ச்சியுடன் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.

பிரதமராக இருப்பது மிகப்பெரிய கௌரவம் என்றாலும் கூட அது எளிதான வேலை அல்ல. கடினமான விஷயங்களை எதிர்கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும் என்னுடைய இந்து நம்பிக்கை எனக்கு மிகுந்த தைரியத்தையும் நம் நாட்டுக்கு என்னால் இயன்றதை செய்ய உறுதியையும் தருகிறது.

மேலும் வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர் கொள்ளவும் பணிபுர ஆட்சி செய்யவும் தன்னலமின்றி பணியாற்றவும் ராமர் எப்போதும் ஓர் உத்வேகமான நபராக இருப்பார் என்று கூறியுள்ளார். அதேபோல் தனது பேச்சை தொடங்கும் போதும் முடிக்கும் போதும் ஜெய் ஸ்ரீ ராம் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England prime minister Rishi Sunak speech about Hindu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->