உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து - சுற்றுலா பயணிகள் கவலை.!
fire accidetn in france eiffel tower
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் உள்ளது. இந்த டவர் பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில், ஈபிள் டவரில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, ஈபிள் டவரில் உள்ள முதல் தளத்திற்கும் 2வது தளத்திற்கும் இடையே லிப்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் குவிந்து இருந்த 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், ஈபிள் டவர் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடையம் விதிthதுள்ளனர்.
நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஈபிள் டவரில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் குவிந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கவலையடைந்துள்ளனர்.
English Summary
fire accidetn in france eiffel tower