#ஷாங்காய் || சினோபெக் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து.! ஒருவர் உயிரிழப்பு.!
Fire in chemical factory in shanghai
ஷாங்காய் நகரில் உள்ள சினோபெக் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சீனாவின் தொழில்துறை மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான ஷாங்காயில் ஜின்ஷான் மாவட்டத்தில் உள்ள சினோபெக் பெட்ரோகெமிக்கல் ஆலையில் அதிகாலை 4 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் விண்ணைத் தொடும் அளவில் கரும்புகை ஏற்பட்ட நிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 4 மணி நேரம் கடும் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Fire in chemical factory in shanghai