வரலாற்றில் முதல் முறை!...தீபாவளியன்று அமெரிக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழத்தின் பிற மாவட்டங்கள், இந்தியாவின் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர் என லட்சக் கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களில் தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், வரலாற்றில் முதல் முறையாக தீபாவளியை முன்னிட்டு நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 1-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க மேயர் அலுவலக துணை ஆணையாளர் திலீப் சவுகான் தெரிவித்துள்ளாதாவது,
நியூயார்க் நகர வரலாற்றில் முதன்முறையாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 1-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் 11 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் படித்து வரும் நிலையில், தீபாவளியின் போது பொது விடுமுறை அறிவிப்பது என்பது எளிதல்ல என்றும், இதற்காக மேயர் ஆடம்சுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First time in history holiday declared for schools in usa on diwali


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->