அமெரிக்கா : முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் பதவியேற்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் நகரில் உள்ள ஹாரிஸ் கவுண்டி சிவில் நீதிமன்றத்தின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் பதவியேற்றார். 

கடந்த 1970-ஆண்டின் தொடக்கத்தில் மோனிகாவின் தந்தை அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு ஹூஸ்டன் பகுதியில் பிறந்து வளர்ந்த மோனிகா தற்போது தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெல்லாயரில் வசித்து வருகிறார்.  கடந்த இருபது ஆண்டுகளாக வக்கீலாக உள்ள மோனிகா உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவில் பல சிவில் உரிமை அமைப்புகளில் ஈடுபட்டுள்ளார். 

இந்த நிலையில், பதவியேற்பு விழாவில் மோனிகா தெரிவித்ததாவது, "ஹூஸ்டனை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து பதவியேற்பு விழாவிற்கு தலைமை வகித்த மாநிலத்தின் முதல் தெற்காசிய நீதிபதியான இந்திய - அமெரிக்க நீதிபதி ரவி சாண்டில் இவ்விழாவில் பேசியதாவது, "சீக்கிய சமூகத்திற்கு இது ஒரு மிகப்பெரிய தருணம். மன்பிரீத் சீக்கியர்களுக்கான தூதுவர் மட்டுமல்ல, நிறமுள்ள அனைத்து பெண்களுக்கும் தூதுவர்" என்று பேசியுள்ளார். 

மேலும் ஹூஸ்டன் மேயர் சில்வெஸ்டர் டர்னர் தெரிவித்ததாவது, "இது சீக்கிய சமூகத்திற்கு மட்டுமன்றி நீதிமன்றத்தின் பன்முகத்தன்மையில் ஹூஸ்டன் நகரத்தின் பன்முகத்தன்மையைக் காணும் அனைத்து வண்ண மக்களுக்கும் இது ஒரு பெருமையான நாள்" என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first woman sikh judge Manpreet monika singh in america


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->