சோமாலியா : மேயர் அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலி.!
five killed in blast attack mayor office in Somalia
சோமாலியாவின் தலைநகரில் உள்ள மேயர் அலுவலகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகாதிசுவில் உள்ள மேயர் அலுவலகம் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஐந்து பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தியதில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் குறைந்தது மேலும் 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்திற்கு எதிராக போராடி வரும் அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம் நாடு முழுவதும் அடிக்கடி குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
English Summary
five killed in blast attack mayor office in Somalia