திடீரென கடற்கரையில் தரையிறங்கிய விமானம் - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டின் நியூ யார்க் பகுதியில் உள்ள செடார் கடற்கரையில் ஒற்றை என்ஜின் கொண்ட செஸ்னா 152 என்ற சிறிய விமானம் என்ஜின் கோளாறு காரணமாக தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானி மற்றும் பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. கடற்கரையில் தரையிறங்கியதால் விமானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து விமானி பேசுகையில், விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கியதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து அமெரிக்க வான்வழி கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளதாவது:- 

"ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று செடார் கடற்கரையில் அவசரமாக தரையிறங்கியது. நடுவானில் பறந்த போது விமானத்தின் என்ஜின் செயல்படாமல் போனது. இதன் காரணமாக விமானத்தை இயக்கிய 60 வயது விமானி, கடற்கரையில் தரையிறக்கினார்,” என்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flight land in america beach


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->