சீன முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் காலமானார்.! - Seithipunal
Seithipunal


சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின்(96), நேற்று மதியம் 12:13 மணிக்கு ஷாங்காய் நகரில் காலமானார். இவர் சீனாவில் கடந்த 1989 முதல் 2004-ம் ஆண்டு வரை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1993 முதல் 2003-ம் ஆண்டு வரை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்தார்.

இதையடுத்து ஜியாங் ஜெமின் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஷாங்காய் நகரில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சமீபகாலமாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் அதிபர் ஜியாங் ஜெமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சீன அரசு நாடு முழுவதும் அரசு கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவித்துள்ளது. மேலும் ஜியாங் ஜெமின் நாட்டின் வளர்ச்சியில் பல ஆண்டுகளாக பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரித்தவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Chinese president Jiang Zemin dies at 96


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->