இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் பக்கம் காத்து! பாரக் ஒபாமா ஆதரவு! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதி நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதேபோல் ஆளுங்கட்சி ஜனநாயக கட்சி சார்பில் முதலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன்  போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

ஜோ பைடனுக்கு  சமீபத்தில் கொரோனா தொற்று இருபதி உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அதிபர் ஜோ பைடன்  தன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அதிபர் பதவிக்கு உண்டான பணிகளை செய்து கொண்டிருந்தார்.

ஜனநாயக கட்சி  நிர்வாகிகள் பலரும் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் உடல் நல கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று மறைமுகமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அதிபர் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாகவும் அதற்கு பதிலாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்ஸை முன்மொழிவதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் கமலா ஹாரிஸ் பல்வேறு நகரங்களுக்கு சென்று தனது பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா சமூக வலைதள பக்கமான எக்ஸலத்தில் பதிவிட்டுள்ளதாவது, மிச்சம் எங்களது நண்பர் கமலா ஹாரிஸ்ஸை  தொடர்பு கொண்டு பேசினோம். அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபராக அவர் இருப்பார்.

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெறுவார். நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலில் அவர் வெற்றியை பெறுவது உறுதி செய்ய எங்களால் முடிந்ததை செய்வோம் என்று பதிவிட்டு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former US President Barack Obama supports Kamala Harris


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->