ஏமனில் சிறை பிடிக்கப்பட்ட 7 இந்தியர் உட்பட 14 பேர் மீட்பு.!
Fourteen person rescued in yemen
ஏமனில் சிறைபிடிக்கப்பட்ட 7 இந்தியர் உட்பட 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்கு ஆசிய நாடான ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால், மூன்று மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சின் சரக்கு கப்பல் சிறை பிடிக்கப் பட்டது.
இந்த கப்பலில் பணியாற்றிய 7 இந்தியர் உட்பட வேறு நாடுகளை சேர்ந்த 14 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
இவர்களை மீட்பதற்காக ஓமன் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததையடுத்து, சிறைப்பிடிக்கப்பட்ட 14 பேர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள் உட்பட 14 பேரையும் மீட்பதற்கு உதவிய ஓமன் அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
English Summary
Fourteen person rescued in yemen