பிரான்ஸ் || எண்ணெய் நிறுவனங்களில் உற்பத்தி முடக்கம்.! மக்கள் அவதி..! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் நாட்டில், பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்பட்டதால், முக்கிய நகரங்களில் பெட்ரோல் பங்குகளுக்கு வெளியே கார்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. 

எண்ணெய் நிறுவனங்களால் நடத்தப்படும் சுத்திகரிப்பு ஆலைகளில், அதிலும் குறிப்பாக டோட்டல் எனர்ஜிஸ், எக்ஸான்மொபில் நிறுவன ஊழியர்கள், ஊதியம் வழங்கல் தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வாழ்க்கைச் செலவில் நெருக்கடி அதிகரித்துள்ளதால் ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி ஊழியர் சங்கம் போராட்டத்தில் இறங்கியுள்ளது. இதனால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் உற்பத்தி 60 சதவீதத்துக்கும் அதிக சரிவை சந்தித்துள்ளது. 

தற்போது, டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்தின் மூன்று சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி முடக்கப்பட்டுள்ளதன் காரணமாக பிரான்சில் பெரும்பாலான நிலையங்களில் பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஒரு சர்வீஸ் ஸ்டேஷனில் வரிசையில் நீண்ட நேரமாக காத்திருந்த ஒரு நபரை முந்திச்செல்ல இன்னொரு நபர் முயன்றதால், கோபத்தில், அந்த நபரை கத்தியால் குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே, பிரெஞ்சு அரசாங்கம் குடிமக்களிடையே ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்ய முயன்று வருகிறது. பிரான்ஸ் அரசாங்கம் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை உடனடியாக தீர்க்க வலியுறுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

frans oil comapny production shutdown


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->