உலக பணக்காரர்கள் பட்டியல் - திடீர் சரிவை கண்ட கவுதம் அதானி.! நடந்தது என்ன?
gautam adani fourth place in world richest list
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், பங்குகளை கையாளுதல் மற்றும் அக்கவுண்ட்ஸ் மோசடியில் ஈடுபட்டதாக அதானி குழுமம் குறித்து, ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"அதானி குழுமத்தின் நிறுவனரும் மற்றும் தலைவருமான கவுதம் அதானியின் குழுமத்தில் ஏழு முக்கிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிப்பு மற்றும், அவரது நிகர மதிப்பு சுமார் $120 பில்லியன் வரை உயர்ந்தது.
இது தொடர்பாக அதானி குழுமம் தெரிவித்ததாவது, "அதானி எண்டர்பிரைசஸ் எப்பிஓ -வை சேதப்படுத்தும் நோக்கில் ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த அறிக்கை தொடர்பாக அதானி குழும சிஎப்ஓ ஜுகேஷிந்தர் சிங் தெரிவித்ததாவது, "தவறான தகவல் மற்றும் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுடன் குழுமத்தின் நல்ல பெயரை பாதிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ரூ. 80,000 கோடிக்கு மேல் சரிந்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, 120 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துமதிப்புடன் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
gautam adani fourth place in world richest list